அமெரிக்காவில் ஏ.ஆர் ரகுமானுக்கு கௌரவ டாக்டர் பட்டம்
இசைத்துறையில் ஏ.ஆர். ரகுமானின் 20 ஆண்டுகால பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவருக்கு, அமெரிக்காவின் புகழ்பெற்ற இசைக் கல்லூரியான பெர்க்லீ வரும் அக்டோபர் 24-ஆம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது. இதுகுறித்து ஏ.ஆர். ரகுமான் கூறுகையில், “இசை உலகில் மிகவும் புகழ்பெற்ற பெர்க்லீ இசைக் கல்லூரி வழங்கும் விருதினைப் பெறுவதற்கு ஆர்வமாக உள்ளேன். வருங்கால இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக அந்தக் கல்லூரி சார்பில் எனது பெயரில் உதவித் தொகை வழங்கவுள்ளதையும் நான் பெருமையாகக் கருதுகிறேன்’ என்றார்.
பாஸ்டன் நகரில் நடைபெறவிருக்கும் அந்த பட்டமளிப்பு விழாவின்போது ஏ.ஆர். ரகுமானுக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது இசையமைப்பில் உருவான பாடல்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து பெர்க்லீ இசைக் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து நிகழ்த்தும் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply