சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலில் 90 பேர் பலி
சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர், ஊழியர்கள் உள்ளிட்ட 90 பேரை சுட்டுக் கொன்றுவிட்டு, அங்குள்ள எரிவாயுக் கிணற்றை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதுகுறித்து, அந்நாட்டில் உள்ள மனித உரிமைகள் அமைப்பின் இயக்குனர் ரமி அப்துல் ரஹ்மான், வெள்ளிக்கிழமை கூறியதாவது: சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள ஷார் எரிவாயுக் கிணறு பகுதிக்கு வியாழக்கிழமை சென்ற தீவிரவாதிகள், அங்கிருந்த பாதுகாப்புப் படையினர், துணை ராணுவப்படையினர் 90 பேரை சுட்டுக் கொன்றனர்.
பின்னர், அந்த எரிவாயுக் கிணறு பகுதியை தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்’ என்று ரமி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விடியோ காட்சிகள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply