மனித உரிமை ஆணைக்குழு வடக்கிற்கு விஜயம் செய்துள்ளது

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு வடக்கிற்கு விஜயம் செய்துள்ளது.யுத்த வலயத்தின் நிலைமைகளை நேரில் பார்வையிடும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது,நான்கு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பிரதிநிதிகள் வடக்கிற்கு நேற்றைய தினம் விஜயம் செய்துள்ளனர்.
மனித உரிமை பாதுகாப்பு மற்றும் மேம்பாடு தொடர்பில் வடக்கின் பல பகுதிகளில் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன.கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் கருத்தரங்கு நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

பொதுமக்கள், காவல்துறையினர், சிவில்சமூக உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply