ஐ.நாவின் இரகசிய விசாரணை; ஏற்றுக்கொள்ளவே முடியாது வெளி விவகார அமைச்சர் :ஜி .எல். பீரிஸ்

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து இரகசிய விசாரணை நடத்தப்படுவதை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நா. விசாரணைக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் விபரங்களை வெளியிடுவதற்கு, ஐ.நா. மனித உரிமைகள் ஆணை யாளர் பணியகத்தின் பேச்சாளர் ருபேர்ட் கொல்வில் மறுத்திருந்தார். இது குறித்துக் கருத்து வெளியிடும்போதே பீரிஸ் இவ்வாறு தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் மேலும் தெரி வித்துள்ளமை வருமாறு: ஐ.நா குழு சார்பாக விசாரணை மேற்கொள்பவர்கள் யார் என்று தெரியாமல் எவ்வாறு அந்த விசாரணை மீது நம்பிக்கை வைக்க முடியும்?

இந்த அநாமதேயமான விசாரணைக்குழு, ஒருவேளை, கங்காரு நீதிமன்றத்தை விடவும் மோசமானதாக இருக்கலாம். எனவே இலங்கை இத்தகைய விசாரணையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. குறைந்தபட்சம் விசாரணையை மேற்கொள் பவர்களின் அடையாளங்கள் கூட வெளிப்படுத்தப்படாத நிலையில், இலங்கையின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பது அபத்தம். ஐ.நா விசாரணைக் குழுவுக்கு ஆலோ சனை வழங்க நியமிக் கப்பட்டுள்ள மூன்று நிபுணர் களில் ஒருவரான அஸ்மா ஜஹாங்கீர் வெளியிட்டு வரும் தொடர்ச்சியான கருத்துக்கள் வருத்தமளிக்கின்றன. அவர் இலங்கையை இலக்கு வைத்து தனிப்பட்ட முறையில் பரப்புரைகளில் ஈடுபடுகிறார் என்று தெரிகிறது. போருக்குப் பிந்திய நல்லிணக்க முயற்சிகளை, அனைத்துலக சமூகத்தின் ஒரு பகுதியினர் சீர்குலைக்க முனைகின்றனர். குறைகளைக் களைய இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் புறக்கணிக்க முடியாது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவை வெளிநாட்டு அமைப்பு என்று திரிபுபடுத்துவது தவறு. எந்தவொரு சூழ்நிலையிலும், இலங்கை அரசு வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறையை அனுமதிக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply