ஐ. தே. கவின் வழமையான பல்லவி மக்களுக்கு தெரியும் : பிரசன்ன ரணதுங்க
ஊவா மாகாணத்தை அரசாங்கம் மீண்டும் வெற்றிகொள்வது உறுதி எனவும் வழமையாகவே தேர்தலுக்கு முன் வாய்ச்சவடால் விடும் ஐக்கிய தேசியக் கட்சியின் பகற்கனவு பலிக்கப் போவதில்லை எனவும் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாடு சுதந்திரமடைந்ததற்குப் பின்பு எந்தவொரு அரசாங்கத்தாலும் மேற்கொள்ளப்படாத அளவில் பாரிய அபிவிருத்தியை ஊவா மாகாணத்தில் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், எப்போதும் தேர்தல் வரும் முன் வெற்றி பெறுவோம் என வாய்ச்சவடால் விடுக்கும் ஐ. தே. க. இம்முறையும் அதையே கூறி 29வது தடவையாகவும் தேர்தல் தோல் வியைத் தழுவப் போகிறது என்றும் குறிப்பிட்டார்.
தேர்தல் தோல்வி மட்டுன்றி 29வது தடவையாகவும் தேர்தலில் தோல்வியுற்ற எதிர்க் கட்சித் தலைவராக ரணில் விக்கிரமசிங்க வரலாறு படைக்கப் போகிறார் எனவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
மேல் மாகாணத்தில் ஆசிரிய ஆலோசகர்கள் 83 பேருக்கு நியமனங் களை வழங்கும் உத்தியோகபூர்வ வைபவம் கொழும்பு ‘சிராவஸ்தி’யில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நியமனக் கடிதங்களைக் கையளித்து உரை யாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய முதலமைச்சர், நாடு நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து செல்வதைப் பொறுக்காதவர்களும் நம் மத்தியில் உள்ளனர். நாட்டின் சமாதானம் மற்றும் நிலையான அரசியல் தன்மையை விரும்பாத இவர்கள் நாடு சிக்கலுக்குள் இருப்பதையே விரும்புகின்றனர். நாட்டு மக்கள் இதனை ஏற்கப் போவதில்லை.
அரசாங்கம் எதைச் செய்தாலும் ‘கமிஷனை’ எதிர்பார்த்தே அவற்றைச் செய்கின்றதென ஐக்கிய தேசியக் கட்சியினர் கூறி வருகின்றனர். அவர்கள் காலத்தில் அவர்கள் செய்ததை முழு நாடும் அறியும். எமது அரசாங்கம் இதய சுத்தியுடன் மக்கள் சேவை புரியும் அரசாங்கம் என்பதை அவர்களுக்குக் குறிப்பிட விரும்புகின்றேன்.
கல்வித் துறையை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தவர்கள் எமது அரசாங்கம் கல்விக்காக நிதி ஒதுக்குவது குறைவு என கூறி வருகின்றனர். இந்த நாட்டில் வேறு எந்த அரசாங்கமும் கல்விக்கு இந்தளவு நிதி ஒதுக்கிய வரலாறு கிடையாது.
நான் மேல் மாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்பு மேல் மாகாணத் திற்கு மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற் பட்ட ஆசிரியர் நியமனங்களை வழங்கியுள்ளேன்.
இதற்கிணங்க தற்போது 20 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிடப்படையில் ஆசிரியர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply