இனங்களுக்கிடையிலான மோதல் நிலைப்பாடு மாற்றப்பட வேண்டும் ஜனதா கட்சியின் தலைவர் : சுப்பிரமணிய சுவாமி
இனங்களுக்கிடையிலான மோதல் என்ற நிலைப்பாடு மாற்றப்படவேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் கலாநிதி சுப்ரமணிய சுவாமி கொழும்பில் தெரிவித்தார். இனப்பிரச்சினையென்பது பிரித்தானிய ஆட்சியாளர்களால் மக்கள் மத்தியில் புகுத்தப்பட்ட விடயம். எனவே வரலாற்றுப் புத்தகங்கள் மாற்றி எழுதப்பட வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், இலங்கை- இந்திய நட்புறவானது தமிழகம் மற்றும் தமிழர் பிரச்சினையின் ஊடாக நோக்கப்படாமல் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை இந்திய ஒத்துழைப்பு என்பவற்றை அடிப்படையாகக் கொண்டதாக அமையவேண்டும் என்றும் கூறினார்.
ஏதாவது ஒரு நாட்டில் இனஅழிப்புக்கள் இடம்பெற்றிருந்தால் மாத்திரமே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் அந்த நாட்டிற்குள் தலையிட முடியும். இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் எந்தவொரு பிரேரணையிலும் இனஅழிப்பு இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படவில்லை. இதனாலேயே, ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியது. தொடர்ந்தும் இந்த ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்த ‘பிரதமர் மோடியின் தலைமையிலான இந்தியா’ எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சுப்ரமணிய சுவாமி மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், இலங்கையில் இனங்களுக்கிடையில் எந்த பிரச்சினையும் இல்லை. பிரித்தானிய ஆட்சியாளர்களாலேயே இனங்களுக் கிடையில் பிரிவு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பான வரலாறுகள் மாற்றியெழுதப்பட வேண்டும்.
அதேநேரம் இலங்கை விடயத்தில் தமிழ்நாட்டுத் தரப்பு என்றதொரு தரப்பு இல்லை. தமிழ்நாட்டிலுள்ள மக்கள் எல்.ரி.ரி.ஈ.யினர் பற்றியோ அல்லது இலங்கைத் தமிழர்கள் பற்றியோ அக்கறை கொண்டுள்ளபோதும் அதனை தமது தேசியக் கொள்கையாகக் கொண்டிருக்க வில்லை.
எல். ரீ. ரீ. ஈயினரின் பணத்தில் செயற்படும் சில அரசியல் தரப்பினரும், இந்தப் பணத்தால் கூடுதல் நன்மைபெறும் தென்னிந்திய சினிமா துறையினருமே இலங்கைப் பிரச்சினையை பூதாகரமாக்கி வருகின்றனர். ஆனால் அங்குள்ள மக்கள் அவற்றை பாரியதொரு பிரச்சினையாகக் கொள்ளவில்லையென்பதை நடைபெற்று முடிந்த தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
மீனவர் பிரச்சினையும் இதனைப் போன்றதே. தமிழக மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிக்க விரும்புவதில்லை. மாறாக ரோலர்களின் உரிமையைக் கொண்டிருக்கும் பாரிய நிறுவனங்கள் மீனவர்களை அத்துமீறி மீன்பிடிக்குமாறு அழுத்தம் கொடுக்கின்றனர். இதனாலேயே அத்துமீறிய மீன்பிடி இடம்பெறுகிறது. இதனைத் தடுக்கும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். இலங்கையின் களநிலைமையை அறிந்துகொள்வதற்கு இலங்கை வந்து பார்க்குமாறு நான் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அழைப்புவிடுக்கின்றேன்.
அதேநேரம், இலங்கைக்கும் இந்தியா வுக்கும் இடையிலான ஒத்துழைப்பானது தமிழக உணர்வு மற்றும் ஈழத்தமிழர் விடயங்களைக் கொண்டதாக அமையக் கூடாது. தேசிய ரீதியில் நன்மை ஏற்படக் கூடிய பொருளாதார வளர்ச்சியை அடையக்கூடிய ஐக்கிய நாடுகள் சபையில் ஒன்றுக்கு ஒன்று ஒத்துழைப்பு வழங்கக் கூடியதாகவே இருநாட்டு உறவுகள் அமைய வேண்டும்.
பிழைகளைத் திருத்திக்கொள்ள வேண்டும்
இலங்கையும் இந்தியாவும் கடந்த காலங்களில் விட்ட பிழைகளைத் திருத்திக்கொள்வதற்கான அரிய சந்தர்ப்பம் தோன்றியுள்ளது. இலங்கையில் பயங்கர வாதப் பிரச்சினை தோன்றுவதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. ஆயுதக் குழுக் களுக்கு பயிற்சிகள் மற்றும் ஆயுதங்களை வழங்கி பாரியதொரு தவறை இழைத் துள்ளது. அதேபோல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இலங்கைத் தரப்பிலும் பல்வேறு சந்தர்ப்பங்கள் நழுவவிடப்பட்டுள் ளன. இவ்வாறான பிழைகள் திருத்தப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு பலப்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் இன அழிப்புக்கள் இடம்பெற்றதாக ஐ.நா மனித உரிமை பேரவையின் எந்தவொரு பிரேரணையிலும் குறிப்பிடப்படவில்லை. லண்டனிலுள்ள எல்.ரி.ரி.ஈ அதரவாளர்களே இன அழிப்பு இடம்பெற்றதாகக் கூறுகின்றனர். இவ்வாறான அழுத்தங்களுக்கு இலங்கை மட்டுமன்றி இந்தியாவும் அடிபணியக் கூடாது.
கொடூர பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து நாம் பெருமையடைகி றோம். பயங்கரவாதமானது இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாகவே இருந்தது. எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாதம் முற்றாக அழிக்கப்படவில்லை. ஆனால் இலங்கையில் முற்றாக பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளது என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply