தைவானில் விமான விபத்து: 51 பேர் பலி

தைவானில் உள்ள கோசியுங் விமான நிலையத்தில் இருந்து டிரான்ஸ் ஏசியா விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று மாலை 5 மணிக்கு புறப்பட்டது. தைவானின் பெங்கு தீவில் உள்ள மகாங் விமான நிலையத்திற்கு அரை மணி நேரத்தில் வந்து சேர வேண்டும். ஆனால், மோசமான வானிலை காரணமாக விமானம் வர தாமதமானது.இந்நிலையில், கன மழை மற்றும் புயல் காற்றுக்கு இடையில் தட்டுத்தடுமாறி வந்த விமானத்தை மகாங் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்க விமானி முயன்றார். ஆனால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஓடுபாதையைவிட்டு விலகி வெளிப்பகுதியில் உள்ள வீடுகள் மீது மோதி விபத்துக்குள்ளானது.இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்தில், 51 பேர் இறந்துவிட்டதாகவும் 7 பேர் காயமடைந்ததாகவும் தைவான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடுமையாக வீசிய புயல் காரணமாக விமானம் மோதியிருக்கலாம் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply