கொலம்பியாவில் ராணுவம் தாக்குதல்: 13 போராளிகள் பலி
கொலம்பியாவில் இரு வேறு இடங்களில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 13 இடதுசாரி கொரில்லா போராளிகள் பலியானதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. அராக்கா கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற ராணுவ தாக்குதலில் எட்டு இ.எல்.என்.கொரில்லா போராளிகள் கொல்லப்பட்டனர். அதே போல் மேடா மத்திய மாகாணத்தில் நடைபெற்ற ராணுவ தாக்குதலில் ஐந்து பார்க் கொரில்லா போராளிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு துறையின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். அந்த இரண்டு பகுதிகளையும் ராணுவம் கைப்பற்றும்போது பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள், சாலைகள், எண்ணெய் கட்டமைப்பு மீது தாக்குதல் நடத்திய இ.எல்.என் போராளிகள் முகாமிட்டுள்ள அராக்காவில் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் வலுக்கட்டாயமாக போராளிகள் இயக்கத்தில் சேர்க்கப்பட்டிருந்த சிறுவர்கள் மீட்கப்பட்டு சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அந்நாட்டின் பாதுகாப்பு மந்திரியான ஜுவன் கார்லோஸ் பின்சன் விரைவில் இப்பகுதிக்கு செல்வார் என்று கூறப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply