இஸ்ரேல்–காசா சண்டை போர் நிறுத்தம் செய்ய மாட்டோம்: ஹமாஸ் அறிவிப்பு
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியான காஸா, ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர்களுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே கடந்த 15 நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. இதுவரை ஆகாயம் மார்க்கமான தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் தற்போது தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளது.இதுவரை நடந்த போரில் பாலஸ்தீனத்தில் 649 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் தரப்பில் 32 ராணுவ வீரர்களும், 3 பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இருதரப்பினரும் போரை நிறுத்தும்படி ஐ.நா. சபை வேண்டுகோள் விடுத்துள்ளது. இஸ்ரேல், காஸா பகுதியில் போர் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. சபையின் மனித உரிமை பிரிவு தலைவர் நவீபிள்ளை குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கிடையே போர் நிறுத்தம் செய்ய நாங்கள் தயாராக இல்லை என்று ஹமாஸ் இயக்க தலைவர் ஹாலித் மெஷால் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
நாங்கள் போரை நிறுத்த வேண்டுமென்றால் எங்கள் மீது திணிக்கப்பட்டுள்ள பொருளாதார தடையை இஸ்ரேல் விலக்கி கொள்ள வேண்டும். எகிப்து இடையேயான ரபா எல்லையை திறக்க வேண்டும். இஸ்ரேல் ஜெயிலில் உள்ள பாலஸ்தீனர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
இதை செய்யாமல் நாங்கள் போர் நிறுத்தம் செய்ய முடியாது. அதை மீறினால் எங்கள் மக்களின் உயிர் தியாகத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply