நைஜீரியாவில் தாக்குதலில் 82 பேர் பலி: தீவிரவாதிகளை ஒடுக்க 4 நாடுகள் இணைந்து போரிட முடிவு
நைஜீரியாவில் இஸ்லாமிய கோட்பாடுகளை கடைபிடிக்கும் அரசு அமைக்க வலியுறுத்தி போகோ ஹரம் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் 200-க்கும் மேற்பட்ட பள்ளிக்கூட மாணவிகளை தீவிரவாதிகள் கடத்திச்சென்று விட்டனர். மாணவிகளை மீட்கும் நடவடிக்கையில் அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் நைஜீரியாவில் உள்ள கடுனா நகரில் நேற்று முன்தினம் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 82 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளின் செயல்பாடுகளை விமர்சித்து வந்த மதகுரு ஷேக் தகிரு பவுசி, முன்னாள் ராணுவ சர்வாதிகாரி முகம்மது புகாரி ஆகியோரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
தீவிரவாதிகளை ஒடுக்கும் வகையில் நைஜீரியா, நைஜர், ஷாடு மற்றும் கேமரூன் ஆகிய 4 நாடுகளும் சேர்ந்து போரிட முடிவு செய்துள்ளனர். 4 நாடுகளின் உள்துறை மந்திரிகள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 4 நாடுகளும் தலா 700 வீரர்கள் வீதம் 2,800 பேரை நைஜீரியாவுக்கு அனுப்பி தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply