நளினி தொடர்ந்த வழக்கில் மத்திய உள்துறை செயலாளர் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தவழக்கில் நளினிக்கு முதலில் தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டது. அதன்பின் ஆயுளாக அது மாற்றப்பட்டது. இந்நிலையில் சமீபத்தில் ஆயுள்தண்டனை கைதிகள் நீண்ட காலம் ஜெயில் இருப்பதாலும், வழக்கு தாமதம் ஏற்பட்டதாலும் அவர்களை அரசு விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கில் தீர்ப்பு கூறினார்கள்.
இதன் அடிப்படையில் நளினி உள்பட பலபேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு செய்தது. இந்தமனு மீதான விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் நளினி ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் குற்றவாளியை விடுவிக்க மத்திய அரசிடம் கருத்து கேட்கும்படி 435 (1ஏ) சட்டப்பிரிவு கூறுகிறது என்று கூறியிருந்தார். 435 (1ஏ) சட்டப்பிரிவை நீக்க வேண்டும். சி.பி.ஐ. வழக்குகளில் குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்திய உள்துறை செயலாளர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply