எழிலன் பிடித்த எங்கள் பிள்ளைகள் எங்கே? காணாமல் போனவர்களின் பெற்றோர்கள் அனந்தியிடம் கேள்வி

முல்லைத்தீவில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்திக்கு எதிராக பெருமளவு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் விடுதலைப்புலிகளால் பலாத்கார ஆட்சேர்ப்பில் பிடிக்கப்பட்டு காணாமல் போன இளைஞர் யுவதிகளின் உறவுகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உமது கணவரை நீ தேடுகிறாய். உமது கணவனால் காணாமல் போன எங்கள் பிள்ளைகளை யார் தேடுவது என பல பதாகைகளை ஏந்திய வண்ணம் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவரான ஆனந்தி சசிதரனால் தாக்கல் செய்யப்பட்டு தொடரப்பட்டு வரும் வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 21 ஆம் திகதி அவர் முல்லைத்தீவு நீதி மன்றத்திற்குச் சமுகமளித்திருந்தார். அவர் சற்றும் எதிர்பாராதவகையில் அங்கு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் திடீரென அனந்தியின் கணவரான எழிலனால் கடத்தப்பட்ட தங்களது உறவினர்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் எங்கே என்று மிகவும் ஆவேசத்துடன் அவரை நோக்கிக் கேள்வியெழுப்பினர். இதனால் ஆனந்திக்கு பாதுகாப்பு படையினரின் உதவியை நாட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தமிழ் மக்கள் திரண்டு வந்து தங்களுடைய பிள்ளைகள் சம்பந்தமாக தன்னிடத்தில் இவ்வாறு கேட்டு முரண்படுவார்கள் என்று ஆனந்தி துளியளவும் எதிர்பார்க்க வுமில்லை.

இதனால் அவர் திக்குமுக்காடிப் போனார். பின்னர் அங்கு நின்ற பொலிஸா ரும், இராணுவத்தினரும் இணைந்து அவரை பொதுமக்களிடமிருந்து மீட்டு அவரது வாகனத்தில் ஏற்றிப் பாதுகாப்பாக அனுப்பிவைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் காலத்தில் எழிலனினால் கடத்தப்பட்ட இந்த மக்கள் குறித்து ஐ. நாவின் மனித உரிமைகள் அமைப்பு இவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. எந்த ஒரு அரச சார்பற்ற நிறுவனமும் இவர்களது துன்பத்தை கேட்கவில்லை. எந்த ஒரு வெளிநாட்டு தூதுவரும் காணாமற் போன இவர்களது உறவினர்கள் தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர்களது உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களது துக்கத்தை வெளிக் காட்டுவதற்காக வேண்டி வெறுங் காலுடன் நடந்து வந்து ஆனந்தி சசிதரனிடம் பதில் கேட்டு 350 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நின்றிருந்தனர். பின்னர் இக்குடும்பங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்பு உதவியாளர் திரு. கனகரட்னம் ஊடாக ஜனாதிபதி அவர்களுக்கு மனு ஒன்றை சமர்ப்பித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply