கோடியக்கரையில் மீன்பிடித்த நாகை மீனவர்கள் 50 பேர் கைது
நாகை மாவட்டம் கோடியக்கரை பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கை காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். மேலும் இலங்கை மீனவர்களும் தமிழக மீனவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழக சிறையில் அடைக்கப்பட்டு இருந்த இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.இந்த நிலையில் நாகை மாவட்டம் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் 5 விசைப்படகுகள், 2 நாட்டு படகுகளில் இன்று அதிகாலை மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 50 மீனவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு சென்றனர். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நாகை அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர் பகுதி மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் யார்? யார்? என்பது குறித்து தமிழக கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply