வெறிபிடித்த நாய் இஸ்ரேல் ஈரான் முக்கிய தலைவர் அயோதுல்லா அலி

ஹமாஸ் இயக்கத்தினருக்கும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடும் சண்டை நீடித்து வருகிறது. இஸ்ரேல் ராணுவம் இதுவரை நடத்திய தாக்குதல்களில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உள்பட 1087 பேர் பலியாகியுள்ளனர். இரு தரப்புக்கும் இடையே 22 நாட்களாக நீடித்து வரும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.இந்நிலையில் இஸ்ரேலுக்கு எதிராக ஈரானின் முக்கிய தலைவரான அயோதுல்லா அலி காமேனி கருத்து தெரிவித்துள்ளார். இஸ்ரேலை வெறி பிடித்த நாய் என்று கூறியுள்ள அவர், அனைத்து இஸ்லாமியர்களும் இஸ்ரேலியர்களின் இன அழிப்புப் போராட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனத்துடன் கைகோர்ப்பதுடன் அனைவரும் ஆயுதமேந்தவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் பாலஸ்தீனத்தின் ராணுவ பலத்தை குறைப்பதிலேயே கவனம் செலுத்தி வந்ததாக குற்றஞ்சாட்டிய அவர், இதனாலேயே வெறிநாயும் பேராசைகொண்ட ஓநாயுமான இஸ்ரேல் அப்பாவி மக்களை கொன்று இன அழிப்பில் ஈடுபடுவதாக கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply