காசாவில் உக்கிர தாக்குதல்; ஒரே இரவில் 100 பேர் பலி
காசா நிலப்பரப்பில் ஹமாஸுக்கு எதிரான தனது தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டிருக்கிறது. மூன்றுவாரங்களுக்கு முன்னர் துவங்கிய இந்த தாக்குதலில் நேற்று திங்களன்று இரவு தான் அதிஉக்கிர தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. ஆளரவமற்ற காசா தெருக்களில் இருந்து மிகப்பெரிய கரும்புகை எழும்பியபடி இருக்கிறது. அங்கிருந்த ஒரே மின்சார நிலையம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து அது செயலிழந்துவிட்டது.கடந்த ஒரு இரவில் மட்டும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பலர் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டதாகவும் காசா சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
திங்கட்கிழமை 10 இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இவர்களில் ஐந்து ராணுவத்தினர் இஸ்ரேலுக்குள் சுரங்கம் வழியாக புகுந்த ஹமாஸ் தீவிரவாதிகள் மூலம் கொல்லப்பட்டனர்.
நீண்ட நெடியதொரு தாக்குதல் நடவடிக்கைக்கு இஸ்ரேலியர்கள் தயாராக இருக்கவேண்டும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சாமின் நெதன்யாஹூ தெரிவித்திருக்கிறார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply