ஐந்து பேர் கொண்ட கூட்டமைப்புக் குழு அடுத்தமாதம் இந்தியா பயணம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்று வரும் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் அதன் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் புதுடில்லிக்கு விஜயம் செய்யவிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளன. இரா.சம்பந்தன் எம்.பி.யுடன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரே விரைவில் இந்தியா புறப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான புதிய மத்திய அரசு பதவியேற்றமையைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு ஒன்று புதுடில்லிக்குப் பயணம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply