467 பாலங்களை அமைக்கும் திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு உதவி இலங்கையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து : பசில்
நாடு முழுவதுமான கிராமங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில் 1210 பாலங்கள் அமைக்கும் வேலைத் திட்டம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ் முதல் படியாக 467 பாலங்கள் அமைக்கும் திட்டத்திற்கு நெதர்லாந்து அரசு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளது. நெதர்லாந்து அரசு இத்திட்டத்திற்கான தொழிநுட்பங்கள், ஆலோசனைகளையும் வழங்கவும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளது. இத் திட்டத்திற்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை அண்மையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் அமைச்சின் செயலாளர் நிஹால் ஜயதிலக்க நெதர்லாந்து பிரதி வெளிவிவகார அமைச்சர் சீமன் ஸ்மிஸ் மத்தியில் கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமை வகித்தார்.
இவ்வேலைத்திட்டத்தினால் பல கிராமங்கள் மக்களின் பொருளாதாரம் பெரும் முன்னேற்றம் பெறவுள்ளது. பல்வேறு வகைகளினான பூமாக் கன்றுகள் உற்பத்தி, இதை கிராமிய மக்களுக்கு பெற்றுக் கொடுக்கும் மத்திய நிலையம், கால் நடை அபிவிருத்தி, உயர்தரத்தைக் கொண்ட பசுமாடுகளை பெற்றுக் கொள்ளக் கூடிய சூழலை ஏற்படுத்தல் விடயமாக இந்நிகழ்வின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ முன்வைத்தார்.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி விடயமாகவும், வர்த்தக நடவடிக்கைகளை மேம்படுத்தல் சம்பந்தமாகவும் நெதர்லாந்து தூதுக் குழுவினருடன் கலந்துரையாடப்பட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply