ஐ.நா விசாரணைக்குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்க சாட்சியங்கள் திரட்டப்படுகின்றன : சுரேஸ்

ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்க சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நியமிக்கப்பட்ட விசாரணைகள் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சமர்ப்பிக்கும் நோக்கில் தமது கட்சி யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான சாட்சியங்களை திரட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். வடக்கில் யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் போதுமானளவு ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply