ஊடகவியலாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதாக சிறீரெலோ அறிவிப்பு
சிறீ தமிழ் ஈழவிடுதலை இயக்கம்
(சிறீரெலோ)
தலைமைச்செயலகம்
யாழ்.மாவட்டம்
வடபுலத்தில்ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்ற அச்சுறுத்தல்களை கண்டித்து இன்றையதினம் மேற்கொள்ளப்படவிருக்கின்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாம் பூரண ஆதரவினை வழங்குவதாக சிறீரெலோ இயக்கத்தின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் வடபுலத்தில் ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் மிக மோசமாக கட்டத்தினை அடைந்துள்ளதுடன் பொய்குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊடகவியளாளர்கள் மீது விசாரணைகளை மேற்கொண்டுவருவதனையும் தாம் வன்மையாக கண்டிப்பதாக யாழ்.மாவட்ட அமைப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இப்படிக்கு
077-1242732 ஊடகப்பிரிவு
சிறீரெலோ
யாழ்.மாவட்டம்
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply