தேசிய பாதுகாப்புக்கே அரசாங்கம் முன்னுரிமை : அமைச்சர் கெஹலிய 

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் விடயத்தில் அரசு மிகவும் அவதானத்துடன் செயற்படுகிறது. 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில் அரசு இவ்வாறு செயற்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். எனவே சகலவற்றையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்க வேண்டிய கட்டாயம் எமக்குள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார். செயலமர்வுக்காக கொழும்பு நோக்கி வந்த யாழ். ஊடகவியலாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்ட விடயம் தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

30 வருடகால யுத்தத்துக்கு முகம் கொடுத்து அந்த வடுக்களுடன் உள்ள எமக்கு அதன் அழிவுகள் என்ன என்பது நன்றாக தெரியும். மீண்டும் அவ்வாறான ஒரு நிலை உருவாகி விடக் கூடாது என்ற விடயத்தில் அரசு தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறது.

எனவே அரச சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கைகள் குறித்து மிக அவதானமாக செயற்படுகிறோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply