டமாஸ்கஸ் அருகே சிரியா ராணுவம் குண்டுவீச்சு: 12 பேர் பலி
சிரியாவில் அதிபர் பஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் அந்த நாட்டு ராணுவம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சண்டையில் சுமார் 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள டவுமா பகுதி கிளர்ச்சியாளர்களின் கோட்டையாக விளங்கி வந்தது. தற்போது இந்த பகுதி அடிக்கடி ராணுவ தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. அந்தவகையில் டவுமாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினமும் சிரியா ராணுவம் திடீரென குண்டு வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் ஒரு குழந்தை மற்றும் ஒரு பெண் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். மேலும் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply