சீனாவில் தொழிற்சாலை வெடி விபத்தில் 65 பேர் பலி – 100 பேருக்கு தீக்காயம்
கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தில் அமைந்துள்ள குன்ஷா நகரில் இருக்கும் உலோக தொழிற்சாலை ஒன்றில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 65-க்கும் அதிகமானோர் பலியாகினர். குன்ஷன் நகரில் வாகனங்களின் சக்கர உருளைகளுக்கு (வீல் ஹப்) பாலீஷ் போடும் உலோக தொழிற்சாலை இயங்கி வருகிறது. இன்று காலை வழக்கம் போல் சுமார் 200 தொழிலாலர்கள் இங்கு வேலை செய்துக் கொண்டிருந்தனர். அப்போது பயங்கரமான வெடிச் சத்தமும், அதனை தொடர்ந்து மரண ஓலமும் கேட்டதால் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் இச்சம்பவம் தொடர்பாக போலீசாருக்கும், மீட்புப் படையினருக்கும் தகவல் அளித்தனர்.விரைந்து வந்த மீட்புப் படையினர் புகை மண்டலமாக மாறிவிட்டிருந்த தொழிற்சாலைக்குள் நுழைந்து 40-க்கும் மேற்பட்ட பிரேதங்களை வெளியேற்றினர். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை குன்ஷன், சுழோ மற்றும் உக்ஸி நகரங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
அவர்களில் 20-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளதாகவும், தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply