இணைய தளத்தில் ஜெயலலிதா பற்றி அவதூறு இலங்கை தூதருக்கு இந்தியா சம்மன்

இலங்கை பாதுகாப்பு துறையின் இணைய தளத்தில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறான கருத்துகளை பரப்பி கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இவ்விவகாரம் தொடர்பாக டெல்லி மேல்சபையில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இன்று அமளியில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற மேலவையிலும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் இந்த பிரச்சினையை கிளப்பினார்கள். அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை கூறும்போது, இலங்கை அரசின் இந்த மோசமான செயலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார். மேலும் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்ட அவதூறு செய்தியானது தமிழக அரசை மட்டுமின்றி இந்திய அரசையே களங்கப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவில் உள்ள இலங்கையின் உயர் தூதரை அழைத்து மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என தம்பிதுரை வலியுறுத்தினார்.

இனியும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்தில் ஒருமனதாக கண்டன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மாநிலங்களவையில் அ.தி.மு.க உறுப்பினர் மைத்ரேயன் வற்புறுத்தினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, இலங்கை தூதருக்கு இந்திய வெளியுறவுத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்தியாவிற்கான இலங்கை தூதர் சுதர்சன் செனவரத்னேவுக்கு அனுப்பியுள்ள சம்மனில் பாரதப் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரை விமர்சித்து இலங்கை ராணுவ இணைய தளத்தில் வெளியிடப்பட்ட செய்திக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் இக்கட்டுரையால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply