சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண வேண்டும் : ரணில்
சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகாணும் வகையிலான புதிய அரசியல் தீர்வொன்று உருவாக்கப்பட வேண்டும் என எதிர் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இன்று இந்த நாட்டு மக்களுக்கு அரசியல் முறைமை வேண்டாம் என்று போய்விட்டது. அரசியல் வாதிகளிடம் அதிகாரம் இருக்கின்றது. இந்த நிலையில் மக்களால் எவ்வாறு அரசியலில் தமது கருத்துக்களை முன்வைக்க முடியும். அமெரிக்கா, இங்கிலாந்து ஏன் இந்தியாவில் செய்ய முடியும் என்பதை ஏன் இலங்கையில் செய்ய முடியாது எனவும் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply