அரச சார்பற்ற நிறுவனங்களை கண்காணிப்பது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை, குறித்த பரந்தளவு விளம்பரம் எதற்கு
அரச சார்பற்ற நிறுவனங்களை கண்காணிப்பது தொடர்பில் அரசாங்கம் புதிதாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கை மற்றும் அது தொடர்பில் வெளியிடப்பட்ட பரந்தளவிலான விளம்பரம் எதற்காக என்பதை அரசாங்கம் இச் சபையில் தெளிவுப்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 23 இன் கீழ் இரண்டு நிலையியற் கட்டளையின் கீழ் விஷேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
சபையில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் உட்பட இதனோடுடனான அரச நிறுவனங்கள், தேசிய நிறுவனங்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் மக்களுக்கு கிடைக்கும் நிதியின் பயன்பாடு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் கண்காணிப்பு என்ற விடயங்களின் கீழ் அரசாங்கம் புதிதாக சுற்றறிக்கையொன்றை வெளியிட்டது. இது அனைத்து அரச அதிகாரிகளுக்கும் சிவில் சமூக அமைப்புகளுக்கும் மற்றும் மக்களுக்காக வெளியிடப்பட்டது.
இதற்காக பத்திரிகைகளில் பரந்தளவிலான விளம்பரம் கொடுக்கப்பட்டது.
மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், அரச நிறுவனங்களின் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் அரச நியமங்களுக்கு கட்டுப்பட வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான சுற்றறிக்கைகள் வெளியிடுவதற்கான தேவை என்னவென்பதை இச் சபையில் தெளிவுபடுத்த வேண்டும்.
இந்த தேசிய அபிவிருத்தி வரைபடம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதா?
இதன் தரநிர்ணயங்கள் எவ்வாறு அமைந்துள்ளது?
நாட்டில் பெரியளவிலான அரச சார்பற்ற நிறுவனங்களும் மற்றும் வருடாந்தம் 100000 அமெரிக்க டொலர்களை விட குறைவாக நிதியுதவி பெறும் சிறிய அளவிலான அரச சார்பற்ற நிறுவனங்களும் உள்ளன.
சிறியளவில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வேலை வாய்ப்புக்களை ஊக்குவிக்கும் சமூக சேவைகளை மேம்படுத்தல் சுகாதார , கல்வி போன்ற துறைகளில் தொடர்புடையதாய் உள்ளன. இவைகள் தேசிய அபிவிருத்திகளுடன் தொடர்புபடுவதில்லை.
எனவே இவற்றுக்கு கிடைக்கும் நிதியுதவிகளை முடக்கினால் அவைகளின் உதவிகளால் இயங்கும் அனைத்தும் முடங்கி போய் விடும்.இதனால் இவ்வாறான அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை பொருந்துமா?
அதுமட்டுமல்லாது இச் சுற்றறிக்கையை பயன்படுத்தி பெரிய அளவில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் எவ்வாறு பிரித்தறியப்படவுள்ளது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply