அத்துமீறிய விசாரணைகளுக்கு ஒருபோதும் அனுமதி இல்லை இராணுவ பேச்சாளர் ருவன் வணிகசூரிய

சர்வதேச விசாரணை தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானங்களை மீறி சர்வதேசம் செயற்படுமாயின் அதற்கமைவாக எமது பாதுகாப்பு செயற்பாடுகளை மேற்கொள்வோம். இலங்கைக்குள் அத்து மீறிய விசாரணைக்கான செயற்பாடுகளை யார் மேற்கொள்வதற்கும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தெரிவித்தார். பாதுகாப்பு செயலாளர் போர்க் குற்றவாளி என்றால் ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள் எனவும் அவர் சவால் விடுத்துள்ளார். இலங்கையில் போர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதெனின் அவை தொடர்பில் தீர்மானிக்க இலங்கையின் ஆணைக்குழு செயற்பட்டு வருகின்றது.

அதையும் மீறி நிபுணர் குழுவினையும் அரசாங்கமே நியமித்துள்ளது. இவர்கள் அனைவரும் தொடர்ச்சியாக விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் இன்னமும் முழுமையானதும் இறுதியானதுமான தீர்மானமொன்று வெளியிடப்படவில்லை.

மேலும் சர்வதேசம் தனக்கு ஏற்றால் போல் சாட்சிகளை தயாரித்து இலங்கை மீதான பொய்யான விசாரணைகளை செய்ய முயற்சிக்கின்றது. அதற்கு ஆதாரங்களை பலப்படுத்தும் வகையில் ஊடக அடக்குமுறை குற்றச்சாட்டுக்களையும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களையும் உருவாக்கி வருகின்றது.

அதே சாயலில் தற்போது பாதுகாப்பு செயலாளர் மீது குற்றம் சுமத்தப்பட்டு அதற்கு எதிரான வழக்கு தொடுக் கப்படுமாயின் அதற்கான சரியான ஆதாரங்களை நிரூபிக்க வேண்டும். இறுதி யுத்தத்தின் போது இராணுவம் பொதுமக்களை கொன்று குவித்திருந்தால் அதற்கு பாதுகாப்பு செயலாளர் துணை போயிருந்தால் அவை தொடர்பில் சரியான ஆதாரமும் இருக்குமாயின் அவற்றை காலம் கடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

அதேபோல் இலங்கை மீதான பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கை மீதான அத்து மீறிய வகையில் சர்வதேசம் செயற்பட முடியாது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply