மேற்குலகிற்கு எதிரான உணர்வுகள் தீவிரமாகும் வாய்ப்பு தனது பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

இலங்கையில் மேற்குலகிற்கு எதிரான உணர்வுகள் தீவிரமடைவதற்கான வாய்ப்புள்ளதால் தனது பிரஜைகளை எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்கா எச்சரித்துள்ளது.இலங்கையில் உள்ள அமெரிக்க பிரஜைகளுக்கான எச்சரிக்கையொன்றை விடுத்துள்ள அமெரிக்கா- நாட்டில் அதிகரித்து வரும் ஆர்ப்பாட்டங்கள் காரணமாக தனது பிரஜைகளை எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுள்ளது.

அமெரிக்க ஐரோப்பிய இராஜதந்திரிகள் கலந்து கொண்ட காணமற் போனவர்களின் குடும்பத்தவர்களுடான சந்திப்பின் போது இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினை தொடர்ந்தே இந்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது. ஐ.நா மற்றும் மேற்குலகிற்க எதிரான ஆர்ப்பாட்டங்கள். காஸா நிலவரம் மற்றும் இலங்கையில் சிவில் சமூகத்தினருக்கு எதிரான அதிகரிக்கும் ஆர்ப்பாட்டங்கள் போன்றவை குறித்தும் அமெரிக்கா தனது பிரஜைகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply