ஜனாதிபதி ஒன்றுபடுத்திய நாட்டை மீண்டும் பிளவுபடுத்த ரணில் முயற்சி

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒன்று படுத்திய இந்நாட்டை மீண்டும் இரண்டாகப் பிரிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க முயல்வதாக உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க தெரிவித்தார். இந்த வகையில் தற்போது வடக்கில் தமிழ் மக்களுடைய வாக்குகளை கவரும் வகையில் பல பிரயத்தனங்களை ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கண்டி – வெலிகொல்ல பிரதேசத்தில் கடந்த திங்களன்று ஆசிரியர் சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் எஸ். பி. திசாநாயக்க மேலும் அங்கு கூறுகையில் :- வடபுல தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு கேட்கும் ரணில் எவ்வகையான வாக்குறுதிகளை வழங்குகின்றார் என்பதை நாம் அறிய வேண்டும்.

எல். ரி. ரி. ஈ. யினரின் கோரிக்கைகளையே ரணில் மீண்டும் முன்வைக்க முயற்சி செய்து வருகின்றார் இன்று கிராமங்களிலுள்ள ஐ. தே. க. ஆதரவாளர்கள் இந்நாட்டில் மீண்டும் ஒரு குண்டு வெடிப்புச் சத்தங்களையோ அல்லது நாடு பிரிக்கப்படுவதையோ விரும்பவில்லை.

தாய்நாட்டை வெளிநாட்டவர்களிடம் தக்க வைக்கவும் அவர்கள் விருப்பமில்லை.

இன்று 80% சத வீதமான ஆடைகளை நாம் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றோம். தற்போது நாடு அமைதியான நிலையிலுள்ளது. மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எற்படுத்தியுள்ளார். ஆகவே மக்கள் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே ஆதரிப்பர் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply