யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடச்செல்லும் உறவுகள் தினமும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை  பார்வையிடச்செல்லும் உறவுகள் தினமும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர். குறிப்பாக நோயாளர்களை பார்வையிடுவதற்கு மீண்டும் பாஸ் நடைமுறை  அமுல்படுத்தப்பட்டிருப்பதால் தூரஇடங்களிலிருந்து தமது உறவுகளை பார்வையிடவரும் மக்கள் தமது உறவுகளை பார்வையிடமுடியாமல் திரும்பிசெல்லும் அவல நிலைக்கு உள்ளாகி வருகின்றதோடு, மன அளவில் விரக்தியுமடைகின்றனர்.எனவே இவற்றினை கருத்தில் கொண்டு நண்பகல் மட்டும் பாஸ் நடைமுறையினை தளர்த்தி மக்களின் அபிலாசைகளை தாங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.

கௌரவ செயலாளர் இரா.செல்வவடிவேல்                                                  11.08.2014
யாழ்.போதனா வைத்தியசாலை அபிவிருத்தி குழு
யாழ்ப்பாணம்
கனம் ஜயா,

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளர்களை  பார்வையிடச்செல்லும் உறவுகள் தினமும் அசௌகரியங்களை எதிர்கொண்டுவருகின்றனர்.
குறிப்பாக நோயாளர்களை பார்வையிடுவதற்கு மீண்டும் பாஸ் நடைமுறை  அமுல்படுத்தப்பட்டிருப்பதால் தூரஇடங்களிலிருந்து தமது உறவுகளை பார்வையிடவரும் மக்கள் தமது உறவுகளை பார்வையிடமுடியாமல் திரும்பிசெல்லும் அவல நிலைக்கு உள்ளாகி வருகின்றதோடு, மன அளவில் விரக்தியுமடைகின்றனர்.எனவே இவற்றினை கருத்தில் கொண்டு நண்பகல் மட்டும் பாஸ் நடைமுறையினை தளர்த்தி மக்களின் அபிலாசைகளை தாங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் தூர இடங்களிலிருந்து வரும் மக்கள் தற்போதைய கடும் வெயிலிற்கு மத்தியில் கால் கடுக்க வீதியோரங்களில் நிற்பதனையும் காணக்கூடியதாக இருப்பதோடு, நுழைவாயில் பகுதியில் மக்கள் தங்குவதற்க்காக  கொட்டகை அமைக்கப்பட்டும் இன்றுவரை மக்களின் பாவனைக்கு அனுமதி வழங்கப்படாமல்; இருப்பதும் கவலை அளிக்கின்றது.
எனவே இவற்றிற்கு தாங்கள் உரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டுமென (சிறீரெலோ) சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தினராகிய நாங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக தங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி
இப்படிக்கு
077-1242732                                                                                                                                                              எஸ்.செந்தூரன்
மாவட்ட அமைப்பாளர்
பிரதி:-ஊடகங்கள்                                சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
யாழ்ப்பாணம்

மூலம்/ஆக்கம் : ஊடக அறிக்கை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply