நாட்டில் ஏற்பட்ட மனித அவலங்களுக்கு சில ஊடகங்களின் நடத்தைகளும் காரணம் :அமைச்சர் டக்ளஸ்

ஊடகம் என்பது மக்களுக்கு உண்மைகளையும் எதிர்காலம் தொடர்பான நம்பிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ளும் வகையில் செயற்பட வேண்டுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க தகவல் திணைக்களத் தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட அபிவிருத்தியில் பிரதேச ஊடகவியலாளர்க ளின் பங்களிப்பு தொடர்பான ஊடகக் கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் தகவல் திணைக்களம் நாடளாவிய ரீதியில் பாரபட்சமற்ற வகையில் இவ்வாறான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.

நமது நாட்டைப் பொறுத்தவரையில் மூன்று மொழிகளில் ஊடகங்கள் தமது செய்திகளை வெளியிடுகின்றன.

உண்மை எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய வகை யில் சில ஊடகங்கள் செயற்படுவதில்லை.

ஊடகங்களின் இவ்வாறான கடந்த கால தவறான வழிநடத்தல்களால் மக்கள் அவலத்திற்குள் தள்ளப்பட்டனர்.

இவ்வா றான மனித அவலங்களுக்கு ஊடகங்களும் முக்கியமான காரணமாக இருந்துள்ளன.

கடந்த காலங்களில் மக்களுக்கு ஊடகங்கள் சரியான தகவல்களை வழங் காத காரணத்தினால்தான் இந்நிலை ஏற்பட்டதை நினைவுபடுத்துகின்றேன்.

இந்த கலந்துரையாடல் மூலம் உங்களது அனுபவங்களை மட்டுமன்றி அதனூடாக உங்களது திறமைகளை மேலும் மேம்படுத்திக்கொள்ள வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அரசாங்க தகவல் திணைக்களமும், யாழ். மாவட்ட செயலகமும் இணைந்து ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டும் கருத்தரங்கை நடத்துகின்றன.

இதில் அரசாங்க தகவல் திணைக் களத்தின் பணிப்பாளர் நாயகம் பேரா சிரியர் ஆரியரட்ன அத்துகல. ஊடகத் துறை அமைச்சின் மேற்பார்வை யாளரும். பாராளுமன்ற உறுப்பினரு மான ஏ.எச்.எம். அஸ்வர், வடமாகாண ஆளுநர் சந்திரசிறி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இதில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், தகவல் திணைக்களப் பணிப்பாளர் வசந்தப்பிரிய உள்ளிட்ட தகவல் திணைக்களத்தின் துறைசார்ந்த பலரும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply