இரண்டே நாட்களில் 56 பேர் எபோலாவுக்கு பலியானதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவி வரும் எபோலா நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஆயிரத்தை கடந்தது. இந்நிலையில், எபோலா நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மேலும் 56 பேர் கடந்த இரண்டே நாட்களில் பலியானதாகவும், இதன் மூலம் உலகளாவிய அளவில் இந்நோயின் தாக்கத்தால் பலியானோரின் எண்ணிக்கை 1,069 ஆக உயர்ந்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லைபிரியாவில் 32 பேரும், சியெரா லியோனில் 19 பேரும், கினியாவில் 4 பேரும், நைஜீரியாவில் ஒருவரும் என மொத்தம் 56 பேர் கடந்த இரண்டே நாட்களில் எபோலாவினால் பலியானதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply