மடுமாதா ஆவணி திருவிழா இன்று
மன்னார் மடு மாதா ஆலயத்தின் ஆவணித் திருவிழா இன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் தலைமையில் கூட்டுத்திருப் பலியுடன் நடைபெறுகிறது. இம்முறை திருவிழாவில் சுமார் 5 இலட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். இவர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் மேற்கொண்டு ள்ளது. பாப்பரசரின் இலங்கை க்கான பிரநிதி உட்பட ஆறு ஆயர்கள் திருவிழா கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றவுள்ளனர்.
அதனையடுத்து மடுமாதா திச்செரூப பவனியும் இறுதி ஆசீர்வாதமும் இடம் பெறவுள்ளது. திருவிழா கடந்த 6ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தினமும் மாலை நவநாள் ஆராதனை இடம்பெற்றதுடன் நேற்று வெப்பர்ஸ் ஆராதனை நடைபெற்றது. இன்று மும் மொழிகளிலும் திருப்பலி பூஜைகள் நடை பெறவுள்ளது. காலை 7 மணிக்கு ஆராத னைகளுடன் திருவிழா ஆரம்பமாகவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply