மக்களை நல்வழிப்படுத்தும் மதகுருமார் சமாதானம் மலர பாடுபட வேண்டும் : கீதாஞ்சலி நகுலேஸ்வரன்

மதகுருமார் என்பவர்கள் இறைவனின் இறைதூதர்களாக மக்களால் பெரிதும் மதிக்கப்படுகிறார்கள். நாட்டின் இறை மையைக் காப்பாற்றவும், நாட்டு மக்களிடையே இனவாதம், மதவாதம் ஏற்படாத வகையில் ஐக்கியத்தை ஏற்படுத்த நாட்டுத் தலைமையுடன் இணைந்து சகல தரப்பினரையும் வழிநடத்துபவர்களாக இருந்து பாடுபட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன் தெரிவித்தார். குறிப்பாக இயேசு கிறிஸ்து நாதரின் போதனைகளை, உயரிய மத போதனைகளை மக்களுக்குப் புகட்ட வேண்டும். உலகில் சமாதானத்தை நிலைநாட்டுவதில் இயேசு நாதர் பெரும் பங்காற்றியவர். அவரைப் பின்பற்றும் மதகுருமார் அவரது வழியிலேயே செல்ல வேண்டும். அவர்களது தூய வெண்ணிற ஆடைகள் சமாதானம், ஐக்கியம், நடுநிலைமை என்பவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஒருபோதும் அரசியல் சார்பு கருத்துக்களை இவர்கள் வெளியிடுவது ஆரோக்கியமானதல்ல.

உலக மக்களால் போற்றப்படும் வண. பிதா தானியல் போன்றவர்கள் போன்று அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கி தலைமைக்கு மத ரீதியாக வழிகாட்டுபவர்களாக மதகுருமார் இருக்க வேண்டுமே தவிர தமது தனிப்பட்ட கருத்துக்களை திணிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply