நேபாள நாட்டில் பலத்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 53 பேர் பலி

நேபாள நாட்டில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. இதனால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழை வெள்ளத்தின் காரணமாக பெருமளவு நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் இடிந்து தரை மட்டம் ஆகின. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான சம்பவங்களில் குறைந்தது 53 பேர் பலியாகி உள்ளனர். 75 பேர் காணாமல் போய் விட்டனர். காணாமல் போய் விட்டவர்கள், வீடுகள் இடிந்து அந்த இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

மழை வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி விட்ட நிலையில், மக்கள் தங்கள் உடமைகளை சுமந்து கொண்டு இடுப்பளவு தண்ணீரில் பாதுகாப்பான இடம் தேடிச் செல்வதை டி.வி. சேனல்கள் படம் பிடித்துக் காட்டின.

இந்த மழையினால் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்கள் தத்தளிப்பதாக அரசு வட்டாரங்கள் கூறின.

3,500 பேர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply