ஈராக்கில் மொசூல் அணைக்கட்டை குர்திஷ் படையினர் கைப்பற்றினர்
ஈராக்கின் வட பகுதியில் உள்ள 15 க்கும் மேற்பட்ட நகரங்களை கடந்த மாதம் கைப்பற்றிய ஜிஹாதிகள் என்றழைக்கப்படும் ஐ.எஸ். படையினர் அவற்றை தங்களது கட்டுபாட்டில் வைத்துள்ளனர். ஈராக்கிற்கு ஆதரவாக குர்தீஷ் படையினருக்கு போர் ஆலோசனை வழங்க போர் தந்திர நிபுணர்கள் கொண்ட ஒரு பெரிய குழுவினை அமெரிக்கா அனுப்பி வைத்தது. மேலும், குர்தீஷ் படையினருக்கு ஏராளமான ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கி வருகிறது.
இதற்கிடையில், மொசூல் நகரத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோசூல் அணையை இரு வாரங்களுக்கு முன்னர் கைப்பற்றிய ஐ.எஸ். படையினர், அந்த அணைக்கட்டை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஈராக்கில் உள்ள அணைகளில் மிகப்பெரிய அணையான இதிலிருந்து தயாரிக்கப்படும் புனல் மின்சாரம் அந்த பிராந்தியத்தில் உள்ள பல பகுதிகளின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது. அதுமட்டுமின்றி, விளைநிலங்களின் பாசனத்துக்கான ஒரே நீராதாரமாகவும் இது விளங்கி வருகிறது.
இப்படி, பல வகைகளில் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும் மோசூல் அணையை ஐ.எஸ். படைகள் வசமிருந்து மீட்பதற்காக அமெரிக்க போர் விமானங்களின் துணையுடன் குர்தீஷ் படையினர் உச்சகட்ட தாக்குதல் நடத்தினர். அணையை சுற்றி முகாமிட்டு இருந்த ஐ.எஸ். போராளிகள் மீது அமெரிக்க போர் விமானங்களின் துணையுடன் நேற்று வான் வழி தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதல் நடத்திய குர்திஷ் படையினர், அணையை கைப்பற்றிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அணையை சுற்றியுள்ள பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடி மற்றும் வெடிகுண்டுகளை அகற்றும் பணியில் குர்திஷ் படையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்பணி சில மணி நேரங்கள் நீடிக்க வாய்ப்புள்ளது. கடந்த 7ந் தேதி ஐ.எஸ் படையினரால் கைப்பற்றப்பட்ட மொசூல் அணையை 10 நாளில் மீண்டும் குர்திஷ் படையினர் அமெரிக்கா உதவியுடன் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply