பயங்கரவாதிகள் எமது தாய் நாட்டுக்கு ஒரு கல்லைக்கூட வீசி எறிய முடியாது : அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல

எமது தாய் நாட்டுக்குக்கெதிராக பயங்கரவாதிகள் சிறு கல்லைக்கூட வீசுமளவுக்காவது இந்நாட்டில் இடமில்லை என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். குண்டசாலை தேர்தல் தொகுதியில் 50 இலட்சம் ரூபா செலவில் இடம்பெற்று வரும் வீதி அபிவிருத்தி பணி தொடர்பில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் :-

சுதந்திரத்துக்குப் பின் ஒரு ஜனநாயக நீரோட்டத்தில் ஆளுமையுடன் கூடிய தலைமைத்துவத்தை வகிக்க தகுதியுடையவராக ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவை நாம் காண்கின்றோம்.

நாட்டில் 30 வருட காலமாக நிலவி வந்த கொடிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர எமக்கு 02 வருடமும் 9 மாதங்களுமே தேவைப்பட்டன. இந்த காலகட்டத்தில் யுத்தம் முடிவுக்கு வரும் என்பதை நாம் அறிவித்தோம். பலர் அதை நையாண்டி பண்ணி ஏளனம் செய்தனர்.

இந்த யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற நிலைப்பாட்டை கூட பலர் வெறுத்ததை நாம் அவதானித்தோம். யுத்தம் முடிவுறாமல் தொடர்ந்தும் இந் நாட்டில் யுத்தம் இடம்பெற வேண்டும் என்ற நிலைப் பாட்டிலும் மக்கள் சிலர் இருந்தனர்.

நாம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம்.

இனி இந்த நாட்டில் மீண்டும் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த இடமளிக்க மாட்டோம் இந்நாட்டில் பயங்க ரவாதம் என்ற போர்வையில் ஒரு கல்லை வீசும் அளவுக்கு ஆயுதங்களையோ அல்லது வேறெதையுமோ பயன்படுத்த நாம் இடமளிக்கப் போவதில்லை என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply