இந்தியா-பாக் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்தானது துரதிருஷ்டவசமானது: அமெரிக்கா

பாகிஸ்தானுடன் வெளியுறவுத்துறை செயலாளர் மட்டத்திலான பேச்சுவார்த்தையை இந்திய அரசு ரத்து செய்தது துரதிருஷ்டவசமானது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை செயலாளருடன் வரும் 25-ம் தேதி இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதாலும், பாகிஸ்தான் தூதரக அதிகாரியான அப்துல் பாசித், காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்ததாலும் தான் இந்த பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா, இரு நாடுகளும் தங்கள் உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளது. இரு நாடுகளும் அவ்வாறு எடுக்கும் எந்த முடிவையும் அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த தருணத்திலும், எதிர்காலத்திலும் இதே கருத்தை தான் அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தும் என அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித்தொடர்பாளரான மேரி ஹார்ப் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply