திருப்பதி ஆலயத்தின் களஞ்சியசாலையில் 150 தொன் நாணய குற்றிகள்
திருப்பதி ஏழுமலையான் கோயில் களஞ்சியசாலையில் 150 தொன் உள், வெளிநாட்டு குற்றிகள் தேங்கி கிடப்பதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் 50 தொன் வெளிநாட்டு நாணயக் குற்றிகள் 100 தொன் உள்நாட்டு நாணயக் குற்றிகள் தேங்கியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இவற்றில் தற்போது செல்லுபடியாகாத 25 சதம் 50 சதம் நாணயக் குற்றிகள் 10 தொன் இருப்பதாகவும் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழு மலையான் திருத்தலத்துக்கு உலகில் பல பாகங்களிலிருந்தும் அடியார்கள் வருவதாக வெளிநாட்டு நாணயக் குற்றிகளும் ஏழுமலையான் உண்டியலில் குவிகின்றன. இதனால் தற்போது 50 தொன் வெளிநாட்டு நாணயக் குற்றிகள் தேங்கி கிடக்கின்றன.உரிய காலத்தில் இவற்றை வங்கிகளுக்கு அனுப்பாத காரணத்தினாலேயே இவை இவ்வாறு காணப்படுகின்றன.
திருப்பதி ஏழுமலையானுக்கு நாள்தோறும் சுமார் இரண்டரை டன் எடை சில்லறை நாணயங்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இவைகளை தினமும் 15 வங்கி ஊழியர்கள் மற்றும் 50 தேவஸ்தான ஊழியர்கள் கணக்கிடுகின்றனர். இதில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு நாளொன்றுக்கு ரூ 50 மட்டுமே சம்பேளம் வழங்குவதால், பலர் இந்த பணியை செய்ய முன்வருவதில்லை என்றும் இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளாக வெளிநாட்டு நாணயங்களை வங்கிகளில் கொடுத்து மாற்றாததால் 50 டன் வரை தேக்கமடைந்துள்ளன. மேலும் உள்ளூர் நாணயங்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக வங்கியில் மாற்றப்படாததால் மொத்த மதிப்பு சுமார் ரூ. 50 கோடியாகும்.
சில்லறை நாணயங்களை வங்கிகளில் மாற்றம் செய்த பின்னர் 45 நாட்களுக்குள் அவை கணக்கில் கொண்டுவரப்பட்டு அதற்கு வட்டி வழங்கப்படும். தற்போது ரூ. 50 கோடி மதிப்புள்ள நாணயங்கள் குடோன்களில் தேங்கி கிடப்பதால், வட்டி ஏதும் வராமல் தேவஸ்தானத்திற்கு நஷ்டமும் ஏற்பட்டுள்ளது.
தேங்கி கிடக்கும் நாணயங்களில் தற்போது செல்லாத 25,50 காசு நாணயங்கள் மட்டும் 10 டன்னுக்கும் மேல் உள்ளன. இவைகளை என்ன செய்வது என தேவஸ்தானத்தினர் ஆலோசித்து வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply