பயங்கரவாத செயற்பாட்டாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரதான அரசியலில் இணைவதைத் தடுக்க சட்டம் அவசியம் : ரொஹான் குணரட்ன
பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்பு பட்ட, பயங்கரவாத செயற்பாட்டாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரதான அரசியல் செயற்பாட்டுக்குள் இணைவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தின் சர்வதேச அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்பான மையத்தின் தலைவர் பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில தரப்பினர் இன்னமும் பிரிவினைவாத நோக்கங்களைக் கொண்டவர்களாகக் காணப் படுகின்றனர். இவ்வாறான வர்கள் அரசியலுக்குள் வருவதன் மூலம் நாட்டில் மீண்டுமொரு அழிவுச் சூழல் ஏற்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்ற ஊடகவியலாளர் சங்கம் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று ஏற்பாடு செய்திருந்த ‘மோடியின் கீழ் இந்தியா, இலங்கை இந்திய உறவின் திருப்புமுனை’ எனும் தொனிப் பொருளிலான விரிவுரையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். பிரிவினைவாத நோக்கம் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பிரதான அரசியலு க்குள் நுழைய அனுமதித்ததன் மூலம் அரசாங்கம் பாரிய தவறிழைத்துவிட்டது.
2009ஆம் ஆண்டே இதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவ்வாறானவர்கள் அரசியலுக்குள் வருவதைத் தடுப்பதற்கு புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். இலங்கை பிரச்சினைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வே பொருத் தமானது. 13வது திருத்தச் சட்டமூலம் என்பது இந்தியாவால் தயாரிக்கப்பட்டு பலவந்தமாகத் திணிக்கப்பட்ட தொன்று. பிராந்திய அரசியலை அடிப்படையாகக் கொண்டதொரு முறை. இது இந்தியாவுக்கு மாத்திரமே பொருத்தமானது.
இலங்கை போன்ற சிறிய நாட்டுக்கு இது பொருத்தமானதல்ல. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தீர்வொன்றே பொருத்தமானதாக அமையும். இது விடயம் தொடர்பில் இந்தியத் தலைவர்களுக்கு எடுத்துக்கூறி புரியவைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி தெரிவுசெய்யப்பட்டிரு ப்பதானது இலங்கை உள்ளிட்ட பிராந்திய நாடுகளுக்கு மிகவும் சக்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை இலங்கை சரியாகப் பயன்படுத்திக்கொள் வதுடன், புது டில்லியுடன் மாத்திரமன்றி தமிழகத்துடனும் சிறந்த நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டியது அவசி யமானது. குறிப்பாக தமிழக கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய கட்சிகளுடன் நல்லுறவை வளர்க்க இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எந்த விடயத்தையும் இனவாதம், மதம் போன்ற கண்ணாடிகளால் பார்ப்பவர் அல்ல. பொருளாதார அபிவிருத்தி என்ற கண்ணாடியால் பார்ப்பவர். இதனை இலங்கையிலுள்ள அரசியல் வாதிகளும் ஒரு முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தமிழ் தேசியம் பேசுகின்றனர்.
ஜாதிக ஹெல உறுமய போன்றவர்கள் சிங்கள தேசியம் பேசுகின்றனர். இவற்றைக் கைவிட்டு அனைவரும் இலங்கை தேசியம் பேசவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையால் வெளியிடப்பட்ட சில பிழையான தகவல்களை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டிலுள்ள சில தரப்பினர் இலங்கை தொடர்பில் பிழையான அபிப்பிராயத்தை வைத்துள்ளனர். மனிதாபிமான நடவடிக்கையின் போது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறிவருகின்றனர்.
அவ்வாறு பெரும் எண்ணிக்கை யானவர்கள் கொல்லப் படவில்லை. அவ்வாறு கூறுபவர்களிடம் பெயர் விபரங்களை வெளியிடுமாறு அரசாங்கம் சவால் விடுக்க வேண்டும்.இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் சார்க் அமைப்பை பலம்மிக்க தொரு மையமாக மாற்ற முடியும். இதற்கு பிராந்திய நாடுகளின் தலை வர்களு டைய ஒத்துழைப்பு அவசிய மானது என்றும் அவர் மேலும் தெரி வித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply