பலஸ்தீனத்திற்கு ஜனாதிபதி நிதி உதவி வழங்கியது சட்டவிரோதமானது : சரத் என் சில்வா
பலஸ்தீனத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி வழங்கியமை சட்டவிரோதமானது என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.பலஸ்தீனத்திற்கு ஜனாதிபதி நிதி உதவி வழங்கிய முறைமை சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சின் செயலாளரும், நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவும் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிடுவது அரசியல் சாசனத்தின் 148 சரத்தை மீறும்செயலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.வரவு செலவுத்திட்டத்திற்கு புறம்பாக இந்தப் பணம் செலவிடப்பட்டுள்ளது என என அவர் குறிப்பிட்டுள்ளார்.வரவு செலவுத் திட்டத்திற்கு புறம்பாக இவ்வளவு பாரிய தொகை பணத்தை செலவிட வேண்டுமாயின் குறைநிரப்புப் பிரேணை ஒன்றை சமர்ப்பித்து அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமானது எனஅவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பணம் தொடர்பில் 148ம் இலக்க சரத்தின் அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்து ஜனநாயக நாடுகளினதும் நிதி நிர்வாகம் பாராளுமன்றின் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் பணத்தை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி தனக்கு விரும்பியவாறு செலவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாகவும், ஜனாதிபதியினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பணத்தை ஈடு செய்ய நாடு மீண்டும் கடன் பெற வேண்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீளச் செலுத்துவதற்கு அரசாங்கத்தின் மொத்த வருமானம் போதுமானதாக இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply