சிரியாவில் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் 2 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலை
சிரியாவில் உள்நாட்டுப் போர் நிலவர செய்திகளை சேகரிக்க சென்ற அமெரிக்க பத்திரிகையாளர் தியோ குர்ட்டிஸ் கடந்த 2012-ம் ஆண்டு சிரியாவுக்கு செல்லும் வழியில் துருக்கி அருகே அல்-நுஸ்ரா போராளிகளால் கடத்தப்பட்டார். கடந்த 2 ஆண்டுகளாக போராளிகளின் பிடியில் இருந்து அவரை விடுவிக்க அமெரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வந்தது. சுமார் 25 நாடுகளை சேர்ந்த அரசு உளவாளிகள் மூலமாகவும் தியோ குர்ட்டிஸ் பற்றிய தகவல்களை சேகரித்து வந்தது.
இதன் விளைவாக, கத்தார் அரசின் உதவியுடன் தியோ குர்ட்டிஸ் நேற்று கோலன் ஹெய்ட்ஸ் பகுதியில் ஐ.நா.சபையின் அமைதிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். உடல் பரிசோதனைக்கு பின்னர் அவர் அங்குள்ள அமெரிக்க அரசு அதிகாரிகளிடம் சேர்க்கப்பட்டு, அமெரிக்கா நோக்கி வந்துக் கொண்டிருப்பதாகவும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply