`ஆயுதக்களைவை` வரவேற்பதாக ஆனந்தசங்கரி அறிக்கை

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பு தமது ஆயுதப்பிரிவைக் கலைத்து ஆயுதங்களை ஒப்படைத்துள்ளமையை தாம் வரவேற்பதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.  இந்த தீர்மானத்தினை எடுப்பதற்கு முதலமைச்சர் சந்திரகாந்தனின் வழிநடத்தலே காரணம் என்றும் அதன் பெருமை அனைத்தும் அவரையே சாரும் என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

தற்போது கிழக்கு மாகாணத்தில் உண்மையான ஜனநாயகம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் ரிஎம்விபி அமைப்பின் உறுப்பினர்கள் தமது கட்சியின் பெயரிலுள்ள புலிகள் என்ற வாசகத்தினை நீக்குவதுடன் சிறார்கள் எவராவது இருந்தால் அவர்களையும் விடுவித்துவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply