நவாஸ் பதவி விலக காத்ரி மேலும் 48 மணி நேர இறுதிக் கெடு

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்பை பதவியில் இருந்து நீக்கும் கோரிக்கையுடன் லாகூர் நகரில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் பேரணியாக சென்ற தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான்  சுமார் 60 ஆயிரம் தொண்டர்களுடன் தற்போது தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்.இதேபோல், கராச்சி நகரில் இருந்து புறப்பட்ட தாஹிர் உல் காத்ரி தலைமையிலான பாகிஸ்தான் அவாமி தெஹ்ரீக் கட்சியினரின் பேரணியும் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்துள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. ஏராளமான ராணுவத்தினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேர்தலில் முறைகேடுகளை செய்து ஆட்சியை பிடித்த பிரதமர் நவாஸ் ஷெரிப் பதவி விலக வேண்டும்.  பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சங்களை முன்வைத்து தாஹிர் உல் காத்ரியும் போராடி வருகிறார்.

நவாஸ் ஷெரிப் பதவி விலகும் வரை அங்கிருந்து புறப்படமாட்டேன் என அறிவித்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். கடந்த 12 நாட்களாக அவரது கட்சி தொண்டர்கள் பாராளுமன்றம் முன்பு முகாமிட்டுள்ளனர்.

நவாஸ் ஷெரிப்பால் நியமிக்கப்பட்ட குழுவினருடனான சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் அவர் பதவி விலக மேலும் 48 மணி நேர இறுதிக் கெடு அளிப்பதாக தாஹிர் உல் காத்ரி நேற்று அறிவித்துள்ளார்.

நேற்று தொண்டர்களிடையே பேசிய அவர், ‘நவாஸ் ஷெரிப் அவர்களே.., நீங்களும் உங்கள் மந்திரிகளும், உங்கள் ஆட்சியும் பதவி விலக மேலும் 48 மணி நேரம் இறுதிக் கெடு அளிக்கிறேன்.

அதற்குள் நீங்கள் பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும்’ என்று எச்சரித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply