மெக்சிகோவில் 127 வயதை தொட்ட உலகின் வயதான பெண்மணி

மெக்சிகோவில் வசிக்கும் லியாண்ட்ரா என்ற பெண்மணிக்கு 127 வயது ஆகிறது. 1887 ஆம் வருடம் ஆகஸ்டு 31ந் தேதி பிறந்த அவர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு முக்கிய காரணம் நன்றாக உணவருந்துவதும், தூங்குவதும் தான். ஐந்து குழந்தைகளுக்கு தாயான அவருக்கு 20 பேரப்பிள்ளைகள் இருந்துள்ள நிலையில் அதில் சிலர் இறந்துவிட்டனர். அது மட்டுமல்லாமல் தற்போது அவருக்கு 73 கொள்ளுப் பேரப்பிள்ளைகளும், 55 எள்ளு பேரப்பிள்ளைகளும் உள்ளனர்.

இருந்தபோதிலும் தனது பிறப்பு சான்றிதழை 40 வருடங்களுக்கு முன் லியாண்ட்ரா தொலைத்துவிட்டார். இரண்டாம் உலகப் போர் மூண்ட போது அவருக்கு 27 வயது நடந்துகொண்டிருந்தது. அவருக்கு பிறந்த ஐந்து குழந்தைகளும் இறந்தவுடன் அவர்களது சடலத்தை புதைத்த லியாண்ட்ரா 20 பேரப்பிள்ளைகளின் மரணத்தையும் பார்த்துள்ளார். இறுதியாக கடந்த 2013 ஆம் ஆண்டு 90 வயதில் ஒருவர் இறந்துள்ளார்.

தற்போது அவருக்கு புதிய பிறப்பு சான்றிதழ் வழங்க மெக்சிகோ அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அவரது 43 வயதான பேத்தியான மிரியம் கூறுகையில், இன்றைய நிலையில் காது கேளாது அவதிப்படும் அவருக்கு கண் பார்வை குறைபாடும் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார். எனினும் தங்கள் குடும்பத்தாருக்கு வரலாற்று ரீதியான கதைகளை கூறி அவர்களை மகிழ்வித்து வருவது லியாண்ட்ராவின் வழக்கமாகும் என்று தெரிவித்த அவர் ஒரு கட்டத்தில் ராணுவத்திற்கு தேவையான ஆட்களை மெக்சிகோ ராணுவம் தேர்வு செய்த போது தங்கள் குடும்பத்தினர் குகைகளில் சென்று பதுங்கியதாக தெரிவித்துள்ளார்.

கடந்த கால நினைவுகளை அசைபோடும் விதமாக 1847-ல் உருவான சில்வர் ஸ்பூன், காதில் அணிந்துகொள்ளும் கம்மல், மோதிரம் மற்றும் பாக்கெட் வாட்ச் ஆகியவற்றை தன்னுடன் லியாண்ட்ரா வைத்துள்ளார். எப்போதும் தெளிவாக காணப்பட்ட அவர், தன்னுடைய புரட்சி கதைகளால் தனது குடும்பத்தினர் மனதிலும் புரட்சிக் காற்றை வீச வைப்பார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட துணி தைப்பதிலும், நெய்வதிலும் ஆர்வம் காட்டியுள்ளார். என்றும் சுறுப்சுறுப்பை கைவிடாததால் தான் அவர் நீண்ட நாள் உயிர் வாழ முடிந்ததாக அவரது பேத்தி மிரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

127 வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கும் லியாண்ட்ராவை பார்க்கும் நமக்கு பிரமிப்பு ஏற்படுகிறது. ஆனால் தற்போது வாழும் மக்களில் பெரும்பாலோர் சுறுசுறுப்பை தொலைத்துவிட்டு நடப்பதை பார்க்கும் போது நமக்கு பரிதாபம் தான் தோன்றுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply