ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை பாதுகாக்க மேலும் 350 அமெரிக்க வீரர்களை அனுப்ப ஒபாமா உத்தரவு
ஈராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் போரிட்டு வருகின்றனர். இவர்கள் ஈராக் படைகளை தோற்கடித்து 2–வது பெரிய நகரான மொசூல் மற்றும் திக்ரித், கிர்குக் மற்றும் குர்தீஷ்தானி உள்ள சில பகுதிகளையும் கைப்பற்றினர். ஈராக்கை காப்பாற்ற அமெரிக்கா தலையிட வேண்டும் என அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் ஏற்கனவே தீவிரவாதிகளுடன் போரில் ஈடுபட்டு பலத்த இழப்புகளை சந்தித்த அமெரிக்கா மறுத்து வந்தது.அதே நேரத்தில் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தையும், தனது அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை காக்க ஏற்கனவே 820 ராணுவ வீரர்களை அமெரிக்கா அனுப்பி வைத்தது.
சமீபத்தில் லிபியா திரிபோலியில் அமெரிக்க தூதரகத்தை தீவிரவாதிகள் கைப்பற்றினர். அதே போன்ற நிலைமை ஈராக்கிலும் ஏற்படக்கூடாது என்பதில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் மேலும் 350 ராணுவ வீரர்களை ஈராக்குக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது.
அதிபர் ஒபாமா உத்தரவின் பேரில் இவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தலைநகர் பாக்தாத்துக்கு சென்று விட்டனர். அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்கர்களுக்கு பாதுகாப்பு அளிப்பார்கள். ஈராக்கில் முகாமிட்டுள்ள வீரர்களில் பெரும்பாலானவர்கள் ராணுவம் மற்றும் கடற்படையை சேர்ந்தவர்கள் என பென்டகன் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply