முன்னேஸ்வரம் பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அனுமதிப்பத்திரம் பெற்று மிருகபலி பூஜை செய்ய உச்ச நீதிமன்று அனுமதி
அனுமதிப் பத்திரம் ஒன்றை பெற்ற பின்னர் சிலாபம் முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் மிருகபலி பூஜை (வேள்வி) செய்யலாம் என உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. சிலாபம் பிரதேச சபையில் இதற்கான அனுமதிப் பத்திரத்தை பெற்ற பின்னர் இந்த பூஜையை அவர்கள் செய்யலாம் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி ஆலயத்தில் மிருக பலி பூஜையின் மூலம் விலங்குகள் சித்திரவதைச் சட்டம் மீறப்படுவதாக கூறி தேசிய பிக்குகள் சம்மேளனம் உட்பட சில அமைப்புகள் வழக்கு தாக்கல் செய்திருந்தன.
எதிர்வரும் 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் ஆலயத்தில் வேள்வி உற்சவம் நடைபெறவுள்ளது. வேள்வி உற்சவத்தினத்தன்று ஆடு, கோழி என்பன பலி கொடுக்கப்படும்.
இவ்வாறு மிருகங்களை இந்து ஆலயத்தில் பலி கொடுப்பது தவறு என்றே மேற்படி அமைப்புகள் ஆட்சேபித்திருந்தன. கடந்த வருடமும் வேள்வி உற்சவத்தின் போது மிருகபலி கொடுப்பதை நீதிமன்றம் தடை விதித்திருந்தது. சில அமைப்புகள் எதிர்த்துள்ளதை காரணம் காட்டி தற்காலிக தடையை நீதிமன்றம் விதித்திருந்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply