கடலில் தத்தளித்த 6 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு
கச்சதீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் படகு மூழ்கிய நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆறு இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டெடு த்துள்ளனர்.கச்சதீவுக்கு கிழக்கே நேற்று முன்தினம் காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவப் பேச்சாளரும் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ள போதிலும் மனிதாபிமானத்தை கருத்திற் கொண்டு இலங்கை கடற்படையினர் இவர்களை கைது செய்வதற்கு பதிலாக பாதுகாப்பாக மீட்டெடுத்து நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பாதுகாப்பு மற்றும் சமகால விடயங்கள் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு கொள்ளுப் பிட்டியிலுள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் இடம்பெற்றது. இதன் போது பிரிகேடியர் மேலும் விளக்கமளிக்கையில்,ஆறு பேருடன் வருகைதந்த தமது படகு கச்சத்தீவை அண்மித்த பகுதியில் மூழ்கிய நிலையில் தாம் தத்தளித்து கொண்டிருப்பதாக கடற்படையினருக்கு வழங்கிய சமிஞ்ஞையை அடுத்து அந்தப் பகுதியில் கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் உடனடியாக விரைந்து அவர்களை மீட்டெடுத் துள்ளனர்.
இவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த நிலையிலும் கூட அவர்கள் தத்தளித்துக் கொண்டிருப்பதை கருத்திற் கொண்டு மனிதாபிமான அடிப் படையில் இவர்கள் மீட்டெடுக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காக இவர்கள் நெடுந்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.இலங்கை கடற்படையினர் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களுக்கு கடற்படையினரின் இந்த நடவடிக்கை சிறந்த பதிலாகும் என்றும் பிரிகேடியர் சுட்டிக்காட்டினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply