ஜப்பான் பிரதமர் நாளை இலங்கை வருகிறார்

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உத்தியோகபூர்வ விஜய த்தை மேற்கொண்டு நாளை இலங்கை வருகிறார். இலங்கை வரும் ஜப்பானியப் பிரதமர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரையும் சந்திக்கவுள்ளார். 2013ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜப்பானுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின்போது விடுத்த அழைப்பின் பேரிலேயே ஜப்பானியப் பிரதமர் இலங்கை வருகிறார். இலங்கைவரும் ஜப்பானியப் பிரதமருக்கு நாளை மாலை பாராளுமன்றத்தில் வரவேற்பு வழங்கப்படவுள்ளது. கடந்த 24 வருடங்களில் ஜப்பானின் பிரதமர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் தடவையாகும்.

ஜப்பானியப் பிரதமரின் இந்த விஜயமானது இரு நாட்டுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளுக்கு மேலும் வலுச்சேர்க்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. ஜப்பானியப் பிரதமருடன் இலங்கை வரும் உயர்மட்டக் குழுவில் அந்நாட்டின் ஜப்பானிய நிறுவனங்கள் மற்றும் வர்த்தக அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் உள்ளடங்கியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply