தமிழ்நாட்டில் இருந்து திருடிச் செல்லப்பட்ட சாமி சிலைகளை மீட்டு ஒப்படைத்த ஆஸ்திரேலிய பிரதமர்
தமிழகத்தின் கோயில்களில் இருந்து திருடிச் செல்லப்பட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள கலைக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளை ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் இந்திய அரசிடம் ஒப்படைத்தார். அந்த சிலைகளை மீட்டுத் தரும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு விடுத்த கோரிக்கையையடுத்து, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு தனியார் கலைக்கூடத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அவற்றை மீட்டுத் தரும்படி அந்நாட்டு அரசை மத்திய வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டது.
இதனையடுத்து, தற்போது இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், 11 மற்றும் 12-ம் நூற்றாண்டு காலத்தில் சோழ வம்ச ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட நடராஜர் சிலையையும், 10-ம் நூற்றாண்டு காலத்து அர்த்தநாரீஸ்வரர் சிலையையும் நேற்று பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார்.
சிலையை பெற்றுக் கொண்ட பிரதமர், ‘இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று, விரைவாக செயல்பட்டு, இந்தியாவில் இருந்து களவாடப்பட்ட சிலைகளை கொண்டு வந்து தந்ததன் மூலம் நமது புராதாண கலாச்சார பாரம்பரியத்துக்கு ஆஸ்திரேலிய மக்கள் எவ்வளவு மதிப்பளிக்கிறார்கள் என்பதை டோனி அபாட் உணர்த்தியுள்ளார்.
அவருக்கும், ஆஸ்திரேலிய மக்களுக்கும் இந்தியாவில் உள்ள ஒன்றேகால் கோடி மக்களின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply