வெற்றிக்கான அதிர்ஸ்டம் தற்போது எதிர்க்கட்சிகளுக்கு இல்லவே இல்லை தேர்தல் பிரசார கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த உரை
எதிர்க்கட்சிகளுக்கு தற்போதைக்கு எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறுவதற்கான அதிர்ஷ்டமோ அல்லது சந்தர்ப்பமோ இல்லவே இல்லை. எதிர்காலத்தில்கூட அவர்களுக்கு அது கிடைக்குமோ என்பதே சந்தேகம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ஊவா தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஏற்கனவே ஊவா மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாகவும், அது குறித்து இனிச் சண்டையிட தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன. அரசாங்க உத்தியோகத்தர்களை அரசு தேர்தலில் பயன்படுத்துவதாக அவை தெரிவிக்கின்றன. தேர்தல் வன்முறைகள் தொடர்பாக பொலிஸாருடன் தொடர்பு கொண்ட வேளை அந்த குற்றச்சாட்டுகள் எதுவுமே ஆதாரமற்றவை என்பது தெரியவந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply